அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் ஓய்வூதியம் - நிதியமைச்சர் அதிரடி

Update: 2025-01-11 08:05 GMT

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து உறுப்பினர் எழிலரசன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசு தற்போது ஒருங்கிணைந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் அதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகவில்லை, அது வெளியாகும் பட்சத்தில் ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்