இறந்தது யாரோ என எட்டி பார்த்த மனைவிக்கு பேரிடியாக கணவன் சடலம்... சென்னையை உலுக்கிய லிஃப்ட் மரணம்

Update: 2024-06-30 08:48 GMT

இறந்தது யாரோ என எட்டி பார்த்த மனைவிக்கு பேரிடியாக கணவன் சடலம்... சென்னையை உலுக்கிய லிஃப்ட் மரணம்

சென்னை புளியந்தோப்பில் உள்ள குடிசை மாற்றுவாரிய கட்ட‌டத்தின், பழுதாகி நின்ற லிஃப்ட்டிலிருந்து இறங்க முயன்று லிப்ஃட் சேம்பரில் விழுந்து முதியவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு....

சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பிளாக் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, லிப்ட் சேம்பரில் முதியவர் விழுந்து உயிரிழந்த‌தாக தகவல் பரவியதால், கே.பி.பார்க் பிளாக் முழுவதும் பரபரப்பானது.

தலைக்குப்புற இறந்து கிடக்கும் இந்த நபரின் பெயர் கணேசன். 55 வயதான இவர், மனைவி மலருடன் சேர்ந்து டிபன் கடை நடத்தி வந்துள்ளார். 10ஆவது மாடியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டு, லிப்டில் வந்த போது, 7 வது மாடியில் லிஃப்ட் பழுதாகி நின்றுள்ளது.

வாட்ச் மேன் மற்றும் லிப்ட் ஆபரே ட்டர் மேலே வருவதற்குள், கணேசன் கீழே இறங்க முயற்சித்த போது கால் இடறி கீழே விழுந்து இறந்த‌தாக கூறப்படுகிறது. 2 மணி நேரமாக கணவர் வரவில்லை என்று தேடிய மனைவி மலருக்கு, யாரோ இறந்து கிடக்கிறார் என்று தகவல் கிடைத்து சென்று பார்த்துள்ளார். அப்போதுதான் தனது கணவர் கணேசன் இறந்து கிடந்த‌து கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தகவலறிந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்த கணேசனின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், உடலை பார்க்க அனுமதிக்கவில்லை என்றும், குடித்துவிட்டு கீழே விழுந்து இறந்துவிட்டதாக காவல்துறையினர் கூறுவதாகவும் மனைவி மலர் குற்றம் சாட்டினார்.

அதே போன்று, உறவினர்கள் யாரையும் ஆம்புலன்சில் ஏற்றவில்லை என்றும் குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டினர். காவல்துறையினர் என்ன எழுதுவார்கள்? எப்படி இறந்தார் என்பது கூட தெரியாது என வேதனை தெரிவித்துள்ளனர்.

லிஃப்டை சரியாக பரிமாரிக்காத‌தே அடிக்கடி பழுது ஏற்பட காரணம் என்று குடியிருப்புவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். உயிரிழப்பு ஏற்பட்ட பிறகாவது, லிஃப்ட்களை முறையாக பராமரிக்க வேண்டும்

Tags:    

மேலும் செய்திகள்