உடல் எடை குறைப்பில் இளைஞர் மரணம்.. சென்னை பிரபல மருத்துவமனைக்கு அதிர்ச்சி கொடுத்த ஐகோர்ட்
உடல் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சை செய்த இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனையை தொடர்ந்து செயல்பட அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் எடை குறைப்பு சிகிச்சை பெற்ற புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் அறுவை சிகிச்சை நடந்த மறுநாளே உயிரிழந்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனை செயல்பட மாவட்ட சுகாதாரத்துறை தடைவிதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி, மருத்துவமனை தொடர்ந்து செயல்பட அனுமதியளித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத்தரப்பில் மேல் முறையீட்டு மனுவில் முறையான கவனம் இல்லாமல், அஜாக்கிரதையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, தனியார் மருத்துவமனைக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது....