ஐகோர்ட் பெண் நீதிபதிக்கு வந்த போன்.. கட் செய்ததும் கமிஷனரிடம் பரபரப்பு புகார்

Update: 2024-09-10 11:07 GMT

சென்னை உயர்நீதிமன்ற பெண் நீதிபதி மீதே வழக்குப் பதிவு செய்து இருப்பதாகக் கூறிய போன் மூலம் மிரட்டிய கும்பல் குறித்து புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் மஞ்சுளா. கடந்த ஒன்றாம் தேதி நீதிபதியின் செல்போனுக்கு தொலைத் தொடர்பு ஆணையத்திலிருந்து அழைப்பதாகக் கூறி ஒருவர் பேசி இருக்கிறார். அதில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நீதிபதியின் செல்போன் எண் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் நீதிபதி மஞ்சுளா மேல் மும்பை அந்தேரி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி இருக்கிறார்.தொடர்ந்து வாட்ஸ் அப் காலில் அந்தேரி காவல் ஆய்வாளர் எனக் கூறிய மற்றொரு நபர் நீதிபதியின் ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை ஒப்படைக்குமாறு மிரட்டியதாகக் கூறப்படுகிறது.இதனால் கடும் மன உளைச்சல் அடைந்த நீதிபதி அவரது உதவியாளர் கிருஷ்ணன் மூலமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. நீதிபதியின் புகார் குறித்து சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியையே மோசடி கும்பல் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்