சென்னையில் மிட் நைட் பார்ட்டியில் சிறுமிக்கு நடந்த கொடூரம் - 2 பேர் சேர்ந்து செய்த கேவலம்

Update: 2024-06-13 06:20 GMT

சென்னையை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், தன் தோழியும் சினிமா காஸ்டியூம் டிசைனருமான அகிரா உடன் அவருடைய பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொண்டார். பார்ட்டியில் மயக்க மருந்து கலந்த கேக்கை சிறுமிக்கு அகிரா கொடுத்ததும், மயங்கி விழுந்த சிறுமியை அகிராவின் காதலனும் அவருடைய நண்பரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், அகிராவையும், அவரது காதலனான கல்லூரி மாணவர் சோமசுந்தரத்தை கைது செய்த போலீசார், தலைமறைவாக இருந்த வில்லியம் என்பவரை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில், வில்லியம்ஸை விழுப்புரம் மாவட்டத்தில் வைத்து கைது செய்திருக்கும் போலீசார், அவருடன் சேர்த்து மேலும் இருவரை கைது செய்தனர். மூவரிடமிருந்தும் 2 கிராம் மெத்தபெட்டமைன் போதை மாத்திரையை போலீசார் பறிமுதல் செய்திருக்கும் நிலையில், மூவரும் இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவர்களை பார்ட்டிக்கு அழைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், சம்பவத்தன்று சிறுமிக்கும் போதை மாத்திரை கலந்து கொடுத்து அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவர, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்