சென்னை ஏர்போர்ட்டில்.. பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விமான நிறுவனங்களுக்கே அதிர்ச்சி

Update: 2024-10-04 08:45 GMT

சென்னையில் இருந்து அந்தமான், இலங்கை, பெங்களூரு, மும்பை, மதுரை செல்லும் 5 புறப்பாடு விமானங்கள் மற்றும் 5 வருகை விமானங்கள் என, ஒரேநாளில் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து பேசிய சென்னை விமான நிலைய அதிகாரிகள், போதிய பயணிகள் இல்லாததாலும், விமான நிறுவனங்களின் நிர்வாக காரணங்களாலும் 10 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பயணிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாகவும், அவர்களின் விமான டிக்கெட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்கு பெரிய அளவில் சிரமங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்