``நீ **டா-னு சொல்லி அடிக்கிறாங்க..'' கடை ஓனரை தாக்கிய கவுன்சிலர்... சென்னையில் ``சாதிய கொடூரம்''

Update: 2024-10-30 14:43 GMT

சென்னையில் கவுன்சிலருக்கு இடையூறாக இருசக்கர வாகனம் இருப்பதாக கூறி கடை உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சரண்ராஜ் பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் பஜனை கோவில் தெருவில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். நேற்று மதியம் சரண்ராஜ் மற்றும் ஊழியர்கள் கடையில் இருந்த போது கடை வாசலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரு சக்கர வாகத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். சரண்ராஜ் கடையின் அருகே பொழிச்சலூர் 8வது வார்டு கவுன்சிலான சுரேஷ் வீடு உள்ளதால் அவரது வீட்டிற்கு செல்லும் போது வழியில் இருசக்கர வாகனம் இருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்து சரண் ராஜிடம் தகராறு செய்துள்ளார். கைகலப்பான நிலையில் சுரேஷின் ஆதரவாளர்கள் சரண்ராஜை சரமாரியாக தாக்கி கடையில் இருந்த பொருட்களை சூறையாடியுள்ளனர். போலீசார் சரண்ராஜ் கொடுத்த புகாரை வாங்கிக்கொண்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது... அத்துடன் நில்லாமல் கடையை மூடச் சென்ற சரண் ராஜை புகார் கொடுத்ததற்காக சுரேஷின் ஆதரவாளர்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் மீண்டும் சரமாரியாக தாக்கியுள்ளனர்... அப்போது சரண் ராஜின் தம்பியான வினோத் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்... கடை ஊழியர்களும் கடுமையாக தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது... சாதியைச் சொல்லி திட்டி திட்டி கவுன்சிலரும் அவரது ஆதரவாளர்களும் அடித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்... இந்நிலையில் தலைமறைவாக உள்ள கவுன்சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்