கோவை சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அன்னூர் அருகே தாறுமாறாக ஓடிய லாரி ஆட்டோ மற்றும் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன... ஆட்டோவில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இவ்விபத்தில் 2 மின்கம்பங்கள் மட்டுமே சேதமடைந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.