வேலை செய்யும்போதே துடிதுடித்து நின்ற உயிர்... EB ஊழியருக்கு நேர்ந்த சோகம்
வேலை செய்யும்போதே துடிதுடித்து நின்ற உயிர்... EB ஊழியருக்கு நேர்ந்த சோகம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூரில் மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூரை சேர்ந்த வெள்ளியங்கிரி , கடந்த இரண்டு ஆண்டுகளாக கெட்டிசெவியூர் மின்வாரிய அலுவலகத்தில் கம்பியாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று கெட்டிசெவியூர் அரசு மேல் நிலைப்பள்ளி அருகே உள்ள ஒரு வீட்டில் மின் இணைப்பு பழுதான நிலையில் , அதனை சரி செய்ய 20 அடி உயர மின்கம்பத்தில் ஏறிய போது, அவர் எதிர்பாராத விதமாக தவறி விழுந்ததில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.