தமிழகத்தில் கிளம்பிய புது டேஞ்சர் ..! பெரும் விபரீதமாகும் அபாயம்...- மருத்துவர்கள் எச்சரிக்கை மணி

Update: 2025-01-02 16:37 GMT

தமிழகத்தில் ஸ்க்ரப் டைஃபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இதன் அறிகுறிகள் என்ன ? இதிலிருந்து தப்புவது எப்படி ? என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

தமிழகத்தில் ஸ்க்ரப் டைஃபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இதன் அறிகுறிகள் என்ன ? இதிலிருந்து தப்புவது எப்படி ? என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

குறிப்பாக, விவசாயிகள், புதர் மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகே வசிப்பவர்கள், மலையேற்றத்தில் ஈடுபடுவோர், கர்ப்பிணிகள், பூச்சி கடிக்கு உள்ளானோர் என இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது...

தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், மாவட்டங்களில் அதிக அளவில் ஸ்க்ரப் டைஃபஸ் பரவி உள்ளதாகவும், இதே போல் கிழக்கு தொடர்ச்சி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பாதிப்பு அதிகரித்து காணப்படுவதாக கூறப்படுகிறது....

இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு, காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள் உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாக கருதப்படுகின்றன.

ஒரு வேளை நோய் தீவிரமடைந்தால், நிமோனிடிஸ், கோமா, மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கின்றனர்.

இதனால் 5 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் எலிசா ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் வாயிலாக நோயை கண்டறியலாம்.

'ஸ்க்ரப் டைஃபஸ்' காய்ச்சலுக்கு உள்ளானவர்களுக்கு, 'அசித்ரோமைசின், டாக்ஸிசைக்ளின்' போன்ற ஆன்டி பயாடிக் மருந்துகள் அளித்து, சிகிச்சை அளிக்க வேண்டும்.

பின், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இதயம், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்து பாதிப்புகள் ஏற்பட்டால், ரத்த நாளத்தின் வழியே, திரவ மருந்துகளை செலுத்தி, உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் உயர் சிகிச்சை மையங்களில், நோயாளிகளை அனுமதிக்க வேண்டும். இந்த வழிகாட்டுதலின் கீழ், 'ஸ்க்ரப் டைஃபஸ்' பாதிப்புகளுக்கு, சிகிச்சை அளிப்பதை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.. 

Tags:    

மேலும் செய்திகள்