பிறந்து 9 நாட்களேயான சிசு... ஈவு இரக்கம் இன்றி... கத்திரியால் குத்திக் கொன்ற தந்தை எனும் சாத்தான் ... நடுங்க வைக்கும் பகீர் காரணம்
மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், பிறந்து 9 நாள்களேயான ஆன பச்சிளம் குழந்தையை தந்தை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி விஜயலட்சுமி. தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக கர்ப்பம் தரித்த விஜயலட்சிமிக்கு பிரசவத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்நிலையில், கடந்த 7 ஆம் தேதி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தையை படுகாயங்களுடன் தம்பதி அனுமதித்திருக்கின்றனர். வயிற்றில் பலத்த காயங்களுடன் குழந்தை அனுமதிக்கப்பட்டதால், சந்தேகமடைந்த மருத்துவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மருத்துவமனைக்கு விரைந்த அதிகாரிகள், வயிற்றில் 3 தையல்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தையை கண்டு வியாசர்பாடி போலீசில் புகாரளித்திருக்கின்றனர். இதனிடையே குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. விசாரணையில், மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால், பிறந்து 9 நாள்களேயான ஆன பச்சிளம் குழந்தையை அவரது தந்தை ராஜ்குமார் கத்திரிக்கோலால் குத்திக் கொன்றது தெரியவர, ராஜ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.