சிம்பா என்ற பெயரில் சிங்கக்குட்டி சின்னமாக அறிமுகம் | Chennai | Hockey

Update: 2024-07-05 08:36 GMT

தமிழ்நாடு ஹாக்கி சங்கம் சார்பாக மாநில அளவில் 306 பள்ளிகள் பங்கேற்கும் ஹாக்கி தொடர் நாளை தொடங்க உள்ளது. இதற்கான இலச்சினை, சின்னம், டி.சர்ட் ஆகியவற்றை அறிவிப்பதற்கான நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. சிம்பா என்ற பெயரில் சிங்ககுட்டி கைகளில் ஹாக்கி மட்டைப்பிடித்த படியான சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பேசிய தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் தலைவருமான சேகர் மனோகரன், 40% பேர் அரசுப்பள்ளி மாணவர்கள் என்றும், தேசிய அளவில் பங்கேற்கும் அளவிலான பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்