வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்போருக்கு.. சென்னை மாநகராட்சி அதிரடி

Update: 2024-05-08 06:05 GMT

நுங்கம்பாக்கம் பூங்காவில் வளர்ப்பு நாய், சிறுமியை கடித்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை மாநகராட்சியானது பூங்கா கண்காணிப்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் செல்லப் பிராணிகளை வளர்ப்போருக்கு பல்வேறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பழக்கமான மனிதர்கள் மற்றும் பழக்கப்பட்ட சுற்றுப்புறத்திலும் விலங்குகளின் நடத்தை வேறுபட்டிருக்கும் என்றும், மேலும், வெளியில் புதிய சூழலில், குழந்தைகள் மற்றும் வயதானவர்களை காணும் போது விலங்குகளுக்கு பயம் மற்றும் பதட்ட உணர்வு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விலங்குகளின் நடத்தை முற்றிலும் வேறுபட்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும், இதற்கு விலங்குகளின் உரிமையாளர்கள் தங்களின் பொறுப்பை உணர்ந்து மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் வெளியில் வரும் போது கவனத்துடன் விலங்குகளை கையாள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வெறித்தனமான நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டதுடன், சரியான உரிமம் பெற்று அதன் பிறகு இனப்பெருக்கம் செய்து, விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்