சென்னையில் செல்போனை ஒளித்து வைத்து கிண்டல் செய்ததால் அடித்தே கொல்லப்பட்ட வடமாநில நபர்

Update: 2024-10-08 12:25 GMT

மாங்காடு, பரணிபுத்தூர், லீலாவதி நகர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவர், மரக்கடை நடத்தி வருகிறார். இதில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணியாற்றி வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அனில் பாண்டே என்பவர், அங்கு பணிபுரியும் குமார் என்பவரின் செல்போன் மற்றும் சார்ஜரை ஒளித்து வைத்து கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமார், இரவு தூங்கிக் கொண்டிருந்த அனில் பாண்டேவின் தலையில் இரும்பு ராடால் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள், அங்கிருந்து அலறடித்துக்கொண்டு ஓடினர். அனில் பாண்டேயின் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்த நிலையில், குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்