செங்கல்பட்டு to கடற்கரை மின்சார ரயில்கள்... பயணிகள் வேண்டுகோள் | Local Train
செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு செல்லும் அனைத்து மின்சார ரயில்களும் தாமதமாவதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்...செங்கல்பட்டில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரயில் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிறுத்தப்படுவதாகவும், ஒரு மணி நேரத்திற்கு பிறகு புறப்பட்டு செல்வதாகவும் பயணிகள் வேதனை தெரிவித்தனர். தாம்பரம் அருகே நடைபெறும் பராமரிப்பு பணியை விரைந்து முடித்து புறநகர் மின்சார ரயில் சேவையை வழக்கம் போல இயக்கிட வேண்டுமென பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.