அதிகாரியை திடீரென சிறைபிடித்த மக்கள்... சென்னை அருகே பதற்றம்... பரபரப்பு
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்ட பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் கருத்து கேட்டு கூட்டம் நடைபெற்றது. வண்டலூரை அடுத்த மேலக்கோட்டையூர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிதாக 750 வீடுகள் கட்டுவதற்காக அதிகாரிகள் இடத்தை அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வண்டலூர் வட்டாட்சியர் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரி முன்னிலையில் மேடைக்கோட்டையூர் பொது மக்களுடன் இன்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது பல ஆண்டுகளாக மேலகொட்டையூர் பகுதியில் வசித்து வரும் தங்களுக்கு நிரந்தர பட்டா வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
350 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாக கூறிய வட்டாட்சியர் விரைவில் பட்டா வழங்கப்படும் என்றும் கூறினார்.
6 ஏக்கர் நிலத்தில் குடிசை மாற்று வாரியம் குடியிருப்புகள் அமைக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று வட்டாட்சியர் கேட்டுக்கொண்டார். முன்னதாக வருவாய் துறை அதிகாரியை சிறை பிடித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.