மக்களை அச்சுறுத்திய சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கொளத்தூரில், கடந்த ஒரு மாத காலமாக சிறுத்தை ஒன்று ஆட்டம் காண்பித்து மக்களை கதிகலங்க செய்திருக்கிறது..
குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை... 50க்கும் மேற்பட்ட ஆடுகளையும், மாடுகளையும் கொன்று வேட்டையாடி மக்களுக்கு உயிர் பயத்தை காட்டி வந்தது....
பாமக நிர்வாகி உட்பட மூவர் கைது - சிறையில் அடைப்பு
இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி, சின்னப்பட்டி ஊராட்சியில் உள்ள வனப்பகுதியில் சிறுத்தை மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது வனத்துறையினரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது...
சிறுத்தையை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற பாமக நிர்வாகி
துப்பாக்கியால் சுடப்பட்டும், கடுமையாக தாக்கப்பட்டும் சிறுத்தை சடலமாக கிடந்த நிலையில், விசாரணை முடுக்கி விட்ட வனத்துறையிடம், திண்ணம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், தற்போதைய ஊராட்சி மன்ற தலைவரின் கணவருமான பாமகவை சேர்ந்த முனுசாமி உட்பட மூவர் சிக்கியிருக்கின்றனர்....
தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுத்தையை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு முனுசாமி கொன்றதாக வனத்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்..
கைதானவர்களுக்கு ஆதரவாக ஊர் மக்கள் திரண்டதால் பரபரப்பு
இந்நிலையில், ஊரை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை வனத்துறையினரால் பிடிக்க முடியாத சுழலில், ஒரு வேளை யாரேனும் சிறுத்தையிடம் சிக்கி உயிரிழந்தால் என்னவாகியிருக்கும் எனக் கேள்வி எழுப்பிய மக்கள், முனுசாமியின் கைதை எதிர்த்து ஒன்று திரண்டது பரபரப்பை ஏற்படுத்தியது..
இந்த சூழலில், மூவரையும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கும் நிலையில், இந்த ஒட்டுமொத்த சம்பவமும் சேலம் மேட்டூரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...