தமிழகத்தை உலுக்கிய லஞ்ச விவகாரம்.. "4மணி நேரம்.. 2நாள்.. அவ்வளவுதான்" - உச்ச கட்ட பரபரப்பில் நீலகிரி

Update: 2023-09-22 17:33 GMT

நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரியில், பேராசிரியர் லஞ்சம் பெற்ற விவகாரம் குறித்து விசாரணை நடைபெற்றது.

உதகை அரசு கலை கல்லூரியில் மாணவர்கள், துறை மாறுதல் பெற பேராசிரியர் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்துள்ளது. தாவரவியல் துறையைச் சார்ந்த ரவி என்ற பேராசிரியர், சில மாணவர்களிடம், தற்போது சேர்ந்துள்ள துறையில் இருந்து வேறு துறைக்கு மாறிச் செல்ல 5 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சமாக பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை மண்டல கல்லூரி கல்வியியல் இணை இயக்குனர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியரிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கையை 2 நாட்களுக்குள் உயர் கல்வித் துறை செயலாளர் மற்றும் கல்லூரி கல்வியியல் துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பேராசிரியர் பணம் பெற்ற ஆடியோ மற்றும் ஸ்கிரின் ஷாட் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்