#BREAKING | இடியுடன் வெளுக்கும் கனமழை.. வட்டமடித்த விமானங்கள் ஏர்போர்ட்டில் பரபரப்பு

Update: 2023-09-29 16:15 GMT

சென்னையில் பலத்த மழையால் வானில் 10 விமானங்கள் வட்டமடித்தன புறப்பாடு சேவையும் பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மாலை முதல் தொடர்ந்து காற்று, இடியுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

டெல்லி, மும்பை, பெங்களூரு, கோவா, கோவை, அபுதாபி, புனே, ராஞ்சி, ஐதராபாத், கொல்கத்தா உள்பட 10 பலத்த மழை பெய்ததால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன. வானிலை சீரானதும் வட்டமடித்து பறந்து கொண்டிருந்த ஒன்றின் பின் ஒன்றாக தரையிறங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதுப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி, ஐதராபாத், அபுதாபி உள்பட 6 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டு இருந்தால் விமான சேவைகளில் சற்று பாதிக்கப்பட்டதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்