கலைஞர் 100 விழா..! முதல்வர் ஸ்டாலினுக்கு ரஜினி வைத்த அன்பு வேண்டுகோள் | Kalaignar 100

Update: 2024-01-07 07:41 GMT

சென்னையில் நடைபெற்ற 'கலைஞர் 100' விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், சிவாஜியையும், எம்.ஜி.ஆரையும் ஒரேநாளில் ஸ்டார் ஆக்கியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்று தெரிவித்தார். கருணாநிதி அரசியலுக்கு செல்லாமல் சினிமாவில் இருந்திருந்தால், எத்தனையோ சிவாஜி, எம்.ஜி.ஆரை உருவாகி இருப்பார் எனவும் ரஜினி பெருமிதம் தெரிவித்தார். சாய்பாபாவை பார்க்க பலர் காத்திருந்த நிலையில், நாத்திகரான கருணாநிதியை பார்க்க சாய்பாபா வந்தார் என்று குறிப்பிட்ட ரஜினி, உங்களுக்குத்தான் கடவுளை பிடிக்காது, ஆனால் அந்த கடவுளுக்கே உங்களை பிடிக்கும் என கருணாநிதியிடம் கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் தனது உடல்நலனை பாதுகாத்து, மக்களுக்காக சேவை செய்து, அவர் தந்தையின் பெயரை காப்பாற்ற வேண்டும் என்றும் ரஜினி தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்