சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்துக்கு முன்னாள் மாணவர்கள் ஆண்டு தோறும் பல கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து வருகின்றனர். இருப்பினும், 1975-ஆம் ஆண்டு படித்த டெல்லியைச் சேர்ந்த சுனில் வாத்வானி என்ற மாணவர், 110 கோடி ரூபாயை நன்கொடையாக கொடுத்து, அதன் மூலம், தனது பெயரில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த சிறப்பு பள்ளியை தொடங்குவதற்கு வித்திட்டுள்ளார். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், ஐஐடி வளாகத்தில், அதன் இயக்குனர் காமகோடி முன்னிலையில் நடைபெற்றது. தேசிய அளவில் முன்னாள் மாணவர் ஒருவர் 110 கோடி ரூபாய் வழங்கி இருப்பது இதுவே முதல்முறை என்று ஐஐடி இயக்குனர் காமகோடி கூறியுள்ளார். இது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்த ஆண்டிலிருந்தே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த படிப்பு துவங்கப்படும் என்றும் அவர் கூறினார்.