உணவு செரிமானத்திற்காக குளிர்பானம் குடித்த இளம்பெண் நள்ளிரவில் உயிரிழப்பு

Update: 2023-09-02 02:16 GMT

திருச்செந்தூர் அருகே உணவு செரிமானம் ஆகாததால் குளிர்பானம் குடித்த இளம்பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அருகேயுள்ள நடுநாலு மூலைக்கிணறு பகுதியை சேர்ந்தவர் சிவராமக்கனி. 21 வயதான இவர், இரவு முட்டைப்போண்டா சாப்பிட்டுவிட்டு, வீட்டில் மீன்குழம்பு வைத்து சாப்பிட்டுள்ளார். இதனால், உணவு செரிமானம் ஆகாத‌தால், குளிர்பானம் வாங்கி குடித்துவிட்டு உறங்க சென்றுள்ளார். நள்ளிரவு 12 மணியளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்ற நிலையில், ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உணவு செரிமானத்திற்காக குளிர்பானம் குடித்த இளம்பெண் நெஞ்சு வலி வந்து மயங்கி உயிரிழந்த‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்