எதிர்பாரா நேரத்தில் மாறிய முடிவு...உடனே ஸ்தம்பித்த போக்குவரத்து - கோவையில் தொற்றிய பரபரப்பு

Update: 2024-11-16 03:17 GMT

கோவை மாவட்டம், சூலூரில், விளைநிலங்களில் எண்ணெய்க் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதமிருந்த விவசாயிகள் திடீரென பேரணியாகச் சென்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள், பின்னர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். பின்னர் திருச்சி சாலை நோக்கி முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாகச் சென்ற அவர்கள், திருச்சி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். சுமார் 40 நிமிடங்களுக்கும் போராட்டம் தொடர்ந்த நிலையில், மறியலில் ஈடுபட்ட 125 விவசாயிகளை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த திடீர் மறியல் காரணமாக திருச்சி சாலையில் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்