ராணுவ வீரரை கொலை வெறியோடு பாய்ந்து பாய்ந்து தாக்கிய கவுன்சிலர் கணவர் - பார்த்தாலே பதறவைக்கும் வீடியோ

Update: 2024-11-16 03:27 GMT

கன்னியாகுமரி அருகே வீட்டில் மதில்சுவர் கட்டும்போது தடுத்து நிறுத்தி ராணுவ வீரரை, கவுன்சிலர் கணவர் கொலை வெறிதனமாக தாக்கும் வீடியோ, வெளியாகி உள்ளது.

தக்கலை அருகே புதூர் பகுதியை சேர்ந்த ஜெனகராஜ், ராணுவ வீரராக லடாக் மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தற்போது விடுமுறைக்கு வீடு திரும்பிய நிலையில் வீட்டு மதில்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கு கும்பலுடன் வந்த வார்டு கவுன்சிலர் கணவர் காசிலிங்கம், பணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு ராணுவ வீரரை தாக்கி மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜெனகராஜ் பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த வீடியோ காட்சிகளோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்