ஆசைக்காட்டி காவலர் செய்த மோசடி- 6 வருசமா ஏமாந்ததே தெரியாமல் இருந்த குடும்பம்

Update: 2024-11-16 03:13 GMT

விழுப்புரம் வழுதரெட்டி காந்தி நகரைச் சேர்ந்த பாண்டியன் என்பவர், கடலூர் ஆயுதப்படை பிரிவில் பணிபுரிந்து வருகிறார். இவர் 6 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு பழக்கமான திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த சம்பத் என்பவரிடம், தனக்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நன்கு பழக்கம் இருப்பதாகவும், அதை பயன்படுத்தி அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறினார். அதை நம்பிய சம்பத், பி.இ. படித்துள்ள தனது மகன் ஞானவேலுக்கு அரசு வேலை வாங்கித் தருமாறு கூறியதுடன் அவர் கேட்ட 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயையும் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட பாண்டியன், ஞானவேலுக்கு அரசு வேலை ஏதும் வாங்கித்தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த சம்பத், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். ஆனால் பாண்டியன் பணத்தை திருப்பித் தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், பாண்டியனை கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்