ஐப்பசி பௌர்ணமி - தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு.. பொங்கி வழிந்த பக்தர்கள் கூட்டம்
ஐப்பசி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
மதுரை பால் சுனை கண்ட சிவபெருமான் தகோயிலில் அன்னபிஷேகம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, பஞ்சலிங்கம் முன்பு புனித நீர் குடங்கள் வைக்கப்பட்டு , சிறப்பு பூஜைகள் நடைபெற்றதன் தொடர்ச்சியாக 108 மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.
ஆண்டிப்பட்டி அருகே மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு அண்ணா அபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், சிவனுக்கு படைக்கப்பட்ட அன்னம் பூஜையின் முடிவில் வைகை ஆற்றில் கரைக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் பூ தூவி சாமி தரிசனம் செய்தனர்.
இதே போல், வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் கோயில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னம், காய்கறிகளால் அலங்காரம் செய்யபட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சாத்தப்பட்ட அன்னத்தில் ஒரு பகுதி கோயில் தீர்த்த குளத்திலும் வேதாரண்யம்
சள்ளதி சுடலிலும் கரைக்கபட்டது.
கும்பகோணம் மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் உள்ள பிரம்ம தீர்த்தேஸ்வரர் பைரவேஸ்வரர், அகத்தீஸ்வரர், கோனேஸ்வரர் தினேஸ்வரர், உள்ளிட்ட 16 சிவலிங்கங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்