கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 4 ஆயிரத்து 646 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணைக்கு ஆயிரத்து 236 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கே.ஆர்.எஸ் அணைக்கு 5 ஆயிரத்து 183 கனஅடி நீர் வரும் நிலையில், 2 ஆயிரத்து 646 கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், பிலிகுண்டுலு, ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.