"குழந்தையை கடத்தி விற்பனை செய்த வழக்கு" நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த கோரிக்கை
மதுரையில் குழந்தை கடத்தி விற்பனை செய்த வழக்கை, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி, பதிவாளருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
"குழந்தையை கடத்தி விற்பனை செய்த வழக்கு" நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த கோரிக்கை
மதுரையில் குழந்தை கடத்தி விற்பனை செய்த வழக்கை, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க கோரி, பதிவாளருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.மதுரை சேர்ந்த வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் என்பவர் அனுப்பியுள்ள மனுவில், மதுரையில் இயங்கி வந்த இருதயம் அறக்கட்டளை என்ற தனியார் அமைப்பு, இரண்டு குழந்தைகளை பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த அறக்கட்டளையின் உரிமையாளர் சிவக்குமார், சில அதிகாரிகள் துணையுடன், போலி ஆவணங்கள் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கில் ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உரிமையாளர் சிவகுமார் தப்பி ஓடி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார்.