"பேஸ்புக்கில் பதிவிட வந்த தைரியம் போலீசில் சொல்ல தைரியம் இல்லையா?" - பாலியல் புகார்.. நடிகையை கிழித்தெடுத்த கோர்ட்

Update: 2024-11-19 10:05 GMT

சினிமா வாய்ப்பு தருவதாகக்கூறி நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் சித்திக்கிற்கு முன் ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மலையாள சினிமா உலகில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் 2016ல் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் சித்திக் மீது காவல் நிலையத்தில் நடிகை புகார் கொடுத்தார்... அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இதற்கிடையே சித்திக்கின் முன் ஜாமீன் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது.

8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படும் சம்பவத்திற்கு தற்போது புகார் அளித்துள்ளதாகவும், புலன் விசாரணைக்கு சித்திக் ஒத்துழைத்து வருவதாகவும் அதனால் அவருக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் எனவும் சித்திக் சார்பில் வாதிடப்பட்ட நிலையில் இதற்கு கேரள அரசின் சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது... இதையடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட தைரியம் கொண்ட பெண்ணுக்கு காவல்துறையில் புகார் அளிக்க 8 ஆண்டுகளாக தைரியம் இல்லையா? என வினவிய நீதிபதிகள், சித்திக்கிற்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்