எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் கொள்ளை வழக்கு.. கைதான 3-வது நபருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் கொள்ளை வழக்கு.. கைதான 3-வது நபருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

Update: 2021-06-30 06:58 GMT
எஸ்.பி.ஐ. ஏ.டி.எம் கொள்ளை வழக்கு.. கைதான 3-வது நபருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் 

எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்.மில் கொள்ளை அடித்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்றாவது குற்றவாளியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.ஜூன் 15 முதல் 18 ஆம் தேதி வரை, சென்னையில் உள்ள  பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையங்களில் சிலர் பணம் எடுப்பது போல சென்று ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்து நூதன முறையில் சுமார் 45 லட்சம் ரூபாய் பணத்தை மர்நபர்கள் திருடியுள்ளனர். இந்த திருட்டு தொடர்பாக இதுவரை 15 வழக்குகள் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மூன்றாவது நபரான ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நஜிம் உசேன் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து  சொகுசு கார் ஒன்றை பறிமுதல் செய்துள்ளனர். சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய பின்னர் தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிபதி உத்தரவுப்படி, நஜிம் உசேன் சிறையில் அடைக்கப்பட்டார்.  போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்,  நஜிம் உசேன்  ஹரியானாவில் இருந்து தமிழகத்திற்கு காரில் வந்து பல்வேறு இடங்களில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு, பின்னர் அதே வாகனத்தில் ஹரியானா திரும்பியது தெரியவந்துள்ளது.  மேலும் நஜிம் மட்டும் 11 லட்சம் ரூபாய் வரை பணம் திருடியதும் தெரியவந்துள்ளது. ஒன்பது பேர்  பல குழுக்களாக செயல்பட்டு வந்ததும்  தெரிய வந்துள்ளது. அதில் ஒரு குழு தலைவனின் முகாந்திரம் அறியப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில், விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என தனிப்படையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்