பீஸ்ட் தலைப்பால் வெடித்த சர்ச்சை - "வரி விதிப்பால் விருப்பத்திற்கேற்ப தலைப்பா?"
தமிழ் திரைப்படங்களுக்கு பிற மொழி தலைப்புகளை சூட்டுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்..
தமிழ் திரைப்படங்களுக்கு பிற மொழி தலைப்புகளை சூட்டுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி குறித்து விரிவாக பார்ப்போம்..
நடிகர் விஜயின் பிறந்தநாளையொட்டி, அவர் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு பீஸ்ட் என பெயர் வைத்தது படக்குழு...
மாஸ்டர் படத்திற்கு பிறகு, பீஸ்ட் என ஆங்கில தலைப்புடன் களமிறங்கினார் விஜய்..
விஜய் படம் என்றால் ஏதாவது சர்ச்சை வெடிக்கும் என ரசிகர்கள் பேசிக்கொண்டிருக்கும் காலத்தில், தற்போது பீஸ்ட் என்ற பிற மொழி வார்த்தையை தலைப்பாக வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
விஜய் நடிக்கும் படங்கள் தாய்மொழியான தமிழ் மொழியில் எடுக்கப்படும் போது, பிறமொழிகளில் தலைப்பு வைக்கும் காரணம் என்னவோ என பிகில், மாஸ்டர், பீஸ்ட் என்ற பட தலைப்புகளை குறிப்பிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை நடைபெற்ற திமுக ஆட்சியின்போது தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
எனினும் அந்த காலக்கட்டத்தில் வன்முறை நிறைந்த காட்சிகளை கொண்ட படங்களும் தமிழில் தலைப்பு வைத்த ஒரே காரணத்திற்காக வரிச்சலுகை பெற்றதால், இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார் பத்திரிகையாளர் பிஸ்மி