"காஞ்சி கைத்தறி பூங்கா அண்ணா பிறந்த நாள் முதல் செயல்படும் - ஆய்வுக்கு பின் அமைச்சர் காந்தி திட்டவட்டம்
காஞ்சிபுரம் கைத்தறி பட்டு பூங்கா, செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்பட தொடங்கும் என துணி நூல் துறை அமைச்சர் காந்தி கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் கைத்தறி பட்டு பூங்கா, செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்பட தொடங்கும் என துணி நூல் துறை அமைச்சர் காந்தி கூறியுள்ளார். கீழ்கதிர்பூர் கிராமத்தில், 75 ஏக்கர் பரப்பில், பேரறிஞர் அண்ணா கைத்தறி பட்டு பூங்கா அமைக்கும் திட்டம்,11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை பார்வையிட்ட அமைச்சர் காந்தி, ஆய்வுக் கூட்டம் நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், கைத்தறி பட்டு பூங்காவில், 25 சதவிகித பணிகள் முடிந்துள்ளதாகவும், செப்டம்பர் 15ஆம் தேதி முதல் பூங்கா செயல்பாட்டுக்கு வரும் என்றும் அறிவித்தார். இந்த நிகழ்வில், அமைச்சர் தா.மோ. அன்பரன், ஆட்சியர், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.