சாத்தான்குளம் விவகாரத்தில் விசாரணை செய்ய நெல்லையில் அலுவலகம் அமைப்பு
சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் தற்காலிக அறை அமைக்கப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் களமிறங்கியிருக்கும் நிலையில் அவர்கள் நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி உள்ளனர். நேற்று ஜெயராஜ், பென்னிக்ஸ் வீட்டுக்கு சென்று விசாரணையை நடத்திய சிபிஐ குழு, அரசு விருந்தினர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 14 அறைகள் கொண்ட இந்த விருந்தினர் மாளிகையில் வெளியாட்கள் யாரும் தங்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக அலுவலகம் ஒன்றை அமைத்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.