காஞ்சி மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா - முதல்முறையாக குக்கிராமத்தில் நுழைந்த கொரோனா வைரஸ்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. குன்றத்தூர் காய்கறி சந்தை வியாபாரி ஒருவருக்கு கொரோனா இருந்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், வியாபாரியின் தாய் மற்றும் கர்ப்பிணி ஒருவர் உள்பட மொத்தம் 3 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை 9 பேர் வீடு திரும்பிய நிலையில், 13 பேர் சிகிச்சையில் உள்ளனர்.