கால்நடை விவசாயிகளுக்கு அதிமுகவினர் தீவனம் வினியோகம் - 10க்கும் மேற்பட்ட லாரிகளில் எடுத்து சென்று வழங்கல்
புதுக்கோட்டையில் அதிமுகவினர் சார்பில் கால்நடை விவசாயிகளுக்கு பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் புல் மற்றும் தீவனங்கள் எடுத்து வரப்பட்டு இலவசமாக வினியோகம் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளிலும் அதிமுகவினர் சார்பில், கால்நடைகளை வளர்த்து வரும் விவசாயிகளுக்கு பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் புல் மற்றும் தீவனங்கள் எடுத்து வரப்பட்டு, இலவசமாக வினியோகம் செய்யப்பட்டது. காவல் துறையுடன் இணைந்து வீடு வீடாக சென்ற அதிமுகவினர் சமூக இடைவெளியுடன், விவசாயிகளுக்கு புல் மற்றும் தீவனங்களை வழங்கினர்.