14 ஆவின் சேர்மன் பதவிகள் கலைப்பு - மீண்டும் தேர்தல் அறிவிப்பு
தமிழகம் முழுவதும் 14 ஆவின் சேர்மன் பதவிகள் கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் மூலம் 14 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருச்சி, கரூர், மதுரை, தேனி, உள்ளிட்ட, 14 ஒன்றியங்களில் 17 உறுப்பினர்கள் உள்ளிட்ட தலைவர் துணைத்தலைவர்களை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற உள்ளது. அந்தந்த ஒன்றியங்களில் பால்வளத்துறை துணைப் பதிவாளர் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சியை பொறுத்தவரை, 27ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனவும், 29ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, மார்ச் 4ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 5ஆம் தேதி முடிவுகள் வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.