மகளிர் சுயஉதவி குழுவில் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி என புகார் - நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

களஞ்சியம் மகளிர் சுயஉதவி குழுவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-02-07 12:08 GMT
களஞ்சியம் மகளிர் சுயஉதவி குழுவில் 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நூற்றுக்கும் மேற்பட்டோர் சேலம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பத்மஸ்ரீ விருது பெற்ற மதுரை சின்னப்பிள்ளை உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்