இணையத்தில் ட்ரோல் மெட்டீரியலான கங்குவா...இணையத்தில் ட்ரோல் மெட்டீரியலான கங்குவா...

Update: 2024-11-15 16:16 GMT

பிரமிக்க வைத்த விசுவல் மேக்கிங்.. அசரச் செய்திருந்த கதாபாத்திரங்களின் தோற்றம் என ட்ரெய்லரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளியாகி இருக்கும் “கங்குவா“ ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா?..

டீசரில் சூர்யா பேசும் நலமா? என்ற வசனம், திரையில் வரும்போது இல்லப்பா.. இல்லை.. என வடிவேல் பாணியில் மனம் நொந்து திரையரங்கை விட்டு வெளியேறியிருக்கிறார்கள் ரசிகர்கள்...

ஒரு பக்கம் தன் இசையால் தேவி ஸ்ரீபிரசாத் தங்களின் காதுகளை கிழித்ததாகவும், மறுபக்கம் டயலாக் டெலிவரி பெயரில் ஒவ்வொரு வசனத்தையும் சூர்யா உள்ளிட்டோர் சத்தம் போட்டு பேசி தங்களை கதற விட்டதாகவும் மனம் குமுறுகிறார்கள்...

இதனிடையே, டிசம்பர் மாதம் கங்குவா சக்சஸ் மீட்டிங் நடைபெறும் எனவும், ஆடியோ லாஞ்ச்சுக்கு வந்திருக்கும் நீங்கள்.. இதே பாஸூடன், சக்சஸ் மீட்டிங்கில் கலந்து கொள்ளலாம் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் பேச்சை ஒரு கும்பல் ட்ரோல் செய்து வருகிறது...

இந்த களேபரத்துக்கு மத்தியில், கங்குவா தனக்காக உருவாக்கப்பட்ட கதை என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியதையும் வைரலாக்கி கூட்டத்தோடு கூட்டமாய் கலாய்த்து வருகிறார்கள் ரசிகர்கள் பலரும்...

பெரும் பொருட் செலவு.. இரண்டரை வருட உழைப்பு... தமிழ் சினிமாவில் இருந்து ஒரு உலகத்தர படைப்பு என பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கங்குவா இப்போது இணையத்தில் ட்ரோல் மெட்டீரியலாகி உள்ளது. அதிலும் சாக்லேட் பாய் லுக்கில் எப்போதும் இருக்கும் கார்த்தியின் கேமியோ லுக்கை பார்த்து கதறி வருகிறார்கள் இணையவாசிகள்...

மாஸ் என்கிற மாசிலாமணி, என்ஜிகே, எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்து பிளாப் படங்களை கொடுத்த சூர்யா ஜெய்பீமில் மட்டும் தப்பித்தார். இதனிடையே கங்குவா தன் கேரியரில் ஒரு அடையாளத்தை தரும் என பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில் படத்திற்கு கிடைத்திருக்கும் நெகட்டிவ் கமெண்டுகள் பலரையும் கலங்கடித்திருக்கிறது...

அமரன் படம் இன்னும் வசூலில் சக்கை போடு போடும் சூழலில் பிரமாண்டங்களுடன் வெளியான கங்குவாவிற்கு பல தரப்பில் பாராமுகம் தான்.. கிட்டத்தட்ட இந்தியன் 2 வரிசையில் சேர்ந்திருக்கிறது கங்குவா.

சின்ன பட்ஜெட் படங்கள் எல்லாம் மக்களை ஈர்த்து வரும் சூழலில் இதுபோன்ற பிரமாண்ட தயாரிப்பில் வந்த படங்களுக்கு கிடைக்கும் ரிவ்யூக்களை பார்க்கும் போது மக்களின் ரசனையை இயக்குநர்கள் புரிந்து கொண்டால் தேவலை என்ற ஆதங்கம் தான்..

Tags:    

மேலும் செய்திகள்