மகாராஷ்டிராவில் பிரசாரத்திற்கு சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனையிட்டனர்.
தேர்தல் அதிகாரிகள் சோதனையிடும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, பாஜக ஆரோக்கியமான தேர்தல் அமைப்பில் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், தேர்தல் ஆணைய விதிகளை பின்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் உத்தவ் தாக்கரே ஹெலிகாப்டரில் சோதனையிட்ட போது, இதேபோன்று மோடி, அமித்ஷா ஹெலிகாப்டர்களில் சோதனையிடுவீர்களா? என கேள்வியை எழுப்பியிருந்தார். இதன் தொடர்ச்சியாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் உடமைகளை சோதனையிட்டிருந்தனர். இப்போது அமித்ஷா ஹெலிகாப்டரிலும் சோதனை நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.