டெல்லியின் காற்றின் தரக்குறியீடு பல்வேறு இடங்களில் 400 மேல் மேல் தாண்டி இருந்தது.

Update: 2024-11-15 15:57 GMT

இதனால் மாசுக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, டெல்லியில் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுரங்கம், சாலை, போரிங், துளையிடும் பணிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் அடிக்கடி தண்ணீர் தெளிக்கப்படுவது, கட்டாயமாக்கப் பட்டுள்ளது. மின்சார வாகனம், சிஎன்ஜி வாகனம், பி.எஸ்-VI டீசல் பேருந்துகள் இல்லாத பேருந்துகள் டெல்லியில் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்