வயநாடு விவகாரம்.. கோர்ட் போட்ட உத்தரவு.. மத்திய அரசு திடீர் முடிவு

Update: 2024-11-15 15:44 GMT

வயநாடு நிலச்சரிவு பேரிடரில் நிதியுதவி உள்ளிட்ட

விவகாரங்களில் இம்மாதம் முடிவெடுக்கப்படும் என

கேரளா உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பேரிடர் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவின் அறிக்கை, இந்த விவகாரங்கள் குறித்து ஆராயும் உயர்நிலைக்

குழுவின் வசம் உள்ளதாகவும், அந்தக் குழு இன்னும் கூடவில்லை என்று தெளிவுபடுத்தியது. மாநில பேரிடர் மீட்பு நிதியில் போதுமான அளவு நிதி உள்ளது என்று மத்திய அரசு இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் விரைவில் முடிவெடுக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்