விழுப்புரத்தில் நள்ளிரவில் தீவிர வாகன சோதனை : எஸ்.பி தலைமையில் 1,500 போலீசார் ஈடுபட்டனர்
விக்கிரவாண்டி தொகுதி இடைதேர்தலை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது.
விக்கிரவாண்டி தொகுதி இடைதேர்தலை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் தீவிர வாகன சோதனை நடைபெற்றது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, திண்டிவனம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் உள்ளிட்ட 64 இடங்களில் நடைபெற்ற சோதனைகளில், டி.எஸ்.பி-க்கள், காவல் ஆய்வாளர்கள் உட்பட ஆயிரத்து 500 பேர் ஈடுபட்டனர். மேலும், ரவுடிகள் மற்றும் வெளியூரை சேர்ந்த குற்றவாளிகள், தனியார் விடுதிகளில் தங்கியுள்ளனரா? என்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.