குளம் போல் தேங்கிய தண்ணீர் கால் சட்டையை மடித்து களமிறங்கிய காவலர்கள் குவியும் பாராட்டுக்கள்

Update: 2024-11-01 12:03 GMT

சென்னை, மதுரவாயல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. இதனால் வானகரம் சிக்னல் அருகே பூந்தமல்லி சாலையில் முழங்கால் அளவு தண்ணீர், குளம் போல தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். இதையடுத்து அங்கு பணியிலிருந்த போக்குவரத்து காவலர்கள், தங்கள் கால்சட்டையை மடித்துக்கொண்டு கடப்பாரை மற்றும் மண்வெட்டி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு, மழைநீர் வடிகாலில் ஏற்பட்ட அடைப்பை சுத்தம் செய்தனர். இதனால் மழைநீர் வேகமாக வடிந்து சாலையில் போக்குவரத்து சீரானது. இந்த காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்