இளைஞர் தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்

Update: 2024-11-01 12:35 GMT

மதுரையைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர், தன்னிடம் இருந்து பிரிந்து வாழும் மனைவியை காண சிவகங்கை மாவட்டம் வடக்கு சாலை கிராமத்திற்கு வந்த நிலையில் கணவன் மனைவியிடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணகுமார் கத்தியால் மனைவி சிந்துஜாவின் கைகளை கீறியதுடன் மனைவி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சரவணக்குமார் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அவரது இறப்பிற்கு காரணமான பெண் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சரவணக்குமாரின் உறவினர்கள் சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் அவர்களை சமாதானம் செய்ததுடன் விசாரனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்