ராமநாதபுரத்தில் காலையில் இருந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில்,
அரண்மனை, சூரங்கோட்டை, பாரதி நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால், வீதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. முக்கிய சாலைகள், தேசிய நெடுஞ்சாலை மற்றும் பேருந்து நிலையத்தில் குளம்போல் மழைநீர் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகளும் பயணிகளும் கடுமையாக அவதி அடைந்தனர்.