ஆசையாக வாங்கி சென்ற பால்கோவா சாப்பிடும் நேரத்தில் நடந்த சம்பவம் பால்கோவா பிரியர்களே உஷார்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், திருக்குன்றம் பகுதியைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்களுக்கு அவர்களது கணக்கில் இருந்து 250 ரூபாய் பிடித்தம் செய்து பால்கோவா வழங்கப்பட்டது. மறுநாள் காலை பால்கோவாவை திறந்து பார்த்தபோது அது கெட்டுப்போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பால் உற்பத்தியாளர்கள், சின்னசேலம் ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்பொழுது அங்கே இருந்த அதிகாரியிடம் இதுகுறித்து கேட்டபோது ஏழு நாட்கள் மட்டுமே கெட்டுப் போகாமல் இருக்கும் என்றும் அதன் பிறகு கெட்டுப் போய்விடும் என்றும், இந்த வருடம் தீபாவளிக்கு சற்று முன் கூட்டியே கொடுத்து விட்டதாக தெரிவித்தார். இதனை அடுத்து அவர்கள் கையில் வைத்திருந்த பால்கோவாவை கீழே கொட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.