பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் - அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைப்பு

இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

Update: 2019-09-15 11:11 GMT
குரோம்பேட்டை பவானி நகரைச் சேர்ந்த சுபஸ்ரீ, பேனர் விழுந்து உயிரிழந்த சம்பவத்தில், லாரி ஓட்டுநர் மனோஜ் கைது செய்யப்பட்டார்.  பேனர் அடித்து கொடுத்த அச்சகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில், பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜெயகோபால் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு, பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக தகவல் பரவியதால், போலீசார் அங்கு விரைந்த‌னர். ஆனால், அங்கு ஜெயகோபால் இல்லாத‌தால் ஏமாற்றம் அடைந்த போலீசார், தனிப்படை அமைத்து அவரை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் 2வது குற்றவாளியாக ​ஜெயகோபாலை போலீசார் சேர்த்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்