சதுரகிரி மலையில் மூச்சு திணறலால் பக்தர் உயிரிழப்பு

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு வருகை தந்த பக்தர் ஒருவர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

Update: 2019-07-27 21:26 GMT
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு வருகை தந்த பக்தர் ஒருவர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.   தரை மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் உள்ள சதுரகிரி கோயிலில் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை  திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு வரும் 31ஆம் தேதி நடைபெற உள்ள ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி பக்தர்கள்  ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை கோயிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையலில் தரிசனம் செய்ய வந்த உசிலம்பட்டியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் மலை ஏறும் போது வழியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். 
Tags:    

மேலும் செய்திகள்