புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு : கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில், புதிய கல்வி கொள்கையை கண்டித்து, அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2019-07-25 08:59 GMT
கும்பகோணத்தில், புதிய கல்வி கொள்கையை கண்டித்து, அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய கல்வி கொள்கைக்கு பல்வேறு தரப்பினருக்கும் எதிர்த்து வரும் நிலையில், திடீரென 2 ஆயிரம் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாணவர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடாமல் இருக்க, அப்பகுதியில் போலீசார் முகாமிட்டுள்ளனர்.  
Tags:    

மேலும் செய்திகள்