அரசு நிலத்தை அபகரித்ததாக மா.சுப்பிரமணியன் மீது வழக்கு
அரசு நிலம் அபகரிப்பு வழக்கில் ஜூன் 18ஆம் தேதி வரை திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியனை கைது செய்ய கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு நிலம் அபகரிப்பு வழக்கில் ஜூன் 18ஆம் தேதி வரை திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியனை கைது செய்ய கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிட்கோவின் நிலத்தை திமுக எம்.எல்.ஏ மா.சுப்ரமணியன், தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு சட்டவிரோதமாக மாற்றம் செய்துள்ளதாக புகார் கூறப்பட்டது. இந்நிலையில், மா.சுப்பிரமணியனும், அவரின் மனைவியும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பார்த்திபன் என்பவர், தம்மை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை மா.சுப்பிரமணியன் மற்றும் அவரின் மனைவியை கைது செய்ய கூடாது என்று உத்தரவிட்டனர்.